சஞ்சய் புக்ஸ், 203, எம்.ஜி.நகர், இரண்டாவது ஸ்டேஜ் ஊரப்பாக்கம், காஞ்சிபுரம் - 603 211. (பக்கம்:176.)
சரித்திர நாவல் என்பது கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் கப்சா.
கல்கி, சாண்டில்யன், கோ.வி.மணிசேகரன், விக்கிரமன் போன்றோர் சரித்திர நாவல் எழுதும் கலையைச் சிறப்பாக வளர்த்திருக்கின்றனர்.
மதுரை அரசி மங்கம்மா எப்படி ராணியானர் என்பதை இந்தச் சிறு நாவலில் அருமையாகச் சொல்கிறார் விக்கிரமன். பல இடங்களில் இவரது உரைநடை, கவிதையாக்கிக் களிப்பூட்டுகிறது. குறிப்பாக, கமலி என்ற பாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போது, "காலை வேளையில், மரகதக் கம்பளம் விரித்த விளைநிலத்தில், முற்றிய கதிர்கள் மீது பொன் வெயில் தவழும் போது ஏற்பட்ட பொன் நிறத்தைக் கண்டிருக்கிறான். அந்நிறம் மங்கை நல்லாள் மேனியில் படர்ந்திருந்ததை இப்பொழுது தான் காண்கிறான். ' என்று எழுதிச் செல்கிறார். உரைநடை அழகு சொக்க வைக்கிறது.