கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, சென்னை-17. (பக்கம்:388.)
தன்னை உயர்த்திக் கொள்ளும் மாபெரும் சக்தி தனக்கு உள்ளே தான் இருக்கிறது.தன்னை உயர்த்தும் போது, தானே தனக்கு நண்பனாகவும், தன்னை வீழ்த்திக் கொள்ளும் போது, தானே தனக்கு பகைவனாகவும் ஆகும் திருமூலரின் திருமந்திரத் தத்துவத்தை, வெளிநாட்டினர் விரிவாக, "ஆளுமைத் திறன்களாக' எழுதி வருகின்றனர். டேவிட் ஷ்வார்ட்ஸ் என்பவர் எழுதிய, சுயமுன்னேற்ற நூலின், சுவையான தமிழாக்கம் இந்த நூல். உலகம் முழுவதும் லட்சக்கணக்காக விற்ற நூலிது. ஒரே மாதத்தில், இரண்டாம் பதிப்பாகத் தமிழில் வலம் வருவதே, இதைத் தமிழ் மக்கள் வரவேற்பதற்குச் சாட்சி ஆகும்.
வெற்றி என்பது நம்பிக்கையால், தனக் குள் விதையாகி, பிறகு வெளியே கனிவது. அவநம்பிக்கையால் தான் தோல்வி நோய் வருகிறது.
கவலையே வேண்டாம். உடல், தோற்றம், மனம், அணுகுமுறை இவைகளில் கவனம் செலுத்தி, நிமிர்ந்து நில்லுங்கள், நேர்முகமாகப் பேசுங்கள், செயல்படுவதில் புதியே வேகம் கொள் ளுங்கள், தோல்வியை மறந்து, புதிதாக எழுந்து நின்று முயன்று வெற்றி பெறுங் கள் என்ற பல வெற்றிச் சுவடிகளை இந்த நூல் காட்டுகிறது. பஞ்சரான டியூப்பை ஒட்டி, காற்றை ஏற்றுவது போல, தோல்வியால் துவண்டு சாய்ந்த மனங்கள், இந்த நூலைப் படித்தால், மீண்டும் நிமிர்ந்து ஓடிவெற்றிக் கோட்டை தொட்டு விடுவார்கள்.