சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 29 ( 7/3) இ பிளாக் முதல் தளம். மேட்லி சாலை, தி.நகர்., சென்னை- 600017. (பக்கம்: 176)
அகன்ற படிப்பறிவு, சிறந்த பட்டறிவு ஆகியவற்றைக் கொண்டு படைக்கப்பட்ட நூல். இளமையைத் தொலைத்து விடாதீர்கள் என்று ஆசிரியர் இளைஞர்களுக்கு கூறுகிறார். அதற்கு ஆழமான கருத்துக்கள் எளிமையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. கற்பது என்பது உணவு உண்பது போன்றது. எவ்வளவு உண்டீர்கள் என்பது முக்கியமல்ல.
எவ்வளவு ஜீரணித்தீர்கள் என்பதே முக்கியம் என்பது அவர் கூறும் கருத்து. எண்ணம் இருந்து பயனில்லை; அதற்கு வலிமை சேர்க்க வேண்டும் என்கிறார். தன்னம்பிக்கை ஒன்று தான் தாழ்வு மனப்பான்மையை அகற்றும் என்பதை பல உதாரணங்களில் வலியுறுத்தியிருக்கிறார்.
முன்னுரையில் முனைவர் வெ.இறையன்பு, "இந்நூல் தகவல் களஞ்சியமாக தரப்பட்டு , நம்மை ஆற்றுப்படுத்த முயல்கிறது' என்பதை நூலைப் படித்து முடித்த அனைவரும் புரிந்து கொள்ளலாம்.