கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 243. விலை: ரூ.110)
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்து பல்வேறு ஜோதிட நூல்கள் எடுத்துரைத்ததை எல்லாம் ஆராய்ந்து, தமது சொந்த அனுபவ முத்திரைகளையும் பதித்து `ஜினேந்திரமாலை' எனும் ஒப்பற்ற ஜோதிட நூலை தமிழ்ச் செய்யுள் நடையில் அருளிச் செய்தவர் ஜைன மாமுனிவர் உபேந்திராசாரியார்.
இருபத்தி மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு, 450க்கும் அதிகமான நான்கு வரி செய்யுட் களை உள்ளடக்கிய இந்நூல் `பிரசன்ன ஜோதிட'த்திற்குரியது.
களவு போன அல்லது ஒளித்து வைக்கப்பட்ட பொருட்கள் குறித்தும், நல்லது, கெட்டது, பிணி, நிவாரணம், மரணம், மக்கட்பேறு, வழக்குகளில் வெற்றி போன்ற வினாக்களுக்கு கோள்களின் அடிப்படையில் பதில் தரும் உட்கருத்துக்கள் அமைந்துள்ளன. தொகுப்பாசிரியர்கள் இன்னும் தெளிவான, எளிய தமிழ் நடையைக் கையாண்டிருக்கலாம்.
தமிழ் இலக்கியம் கற்றுணர்ந்து ஜோதிடமும் பயின்று வரும் அன்பர்களுக்கு ஜோதிடமேதை அமரர் சரஸ்வதி வழங்கியுள்ள அறிவுப் பெட்டகம் இந்நூல்.