வெளியீடு: நிவேதிதா புத்தக பூங்கா. 14/260, இரண்டாவது தளம், பீட்டர் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 320.)
மாமல்லபுரக் கடற்கரையில் உள்ள கடற்கரைக் கோவில் ஓர் அமர படைப்பு. ராஜசிம்மனின் கனவு அது. தம் பாட்டனார் மாமல்லன் என்ற புகழ்ப் பெயர் கொண்ட நரசிம்மவர்மரைப் போன்று கலை ஆர்வம் படைத்தவர் ராஜசிம்மன். நரசிம்மவர்மன் தான் கடற்கரைக் கோவிலை அமைத்தவன் என்று எண்ணியிருந்த காலம் உண்டு. ஆனால், ராஜசிம்மன் தான் படைத்தான் என்பதற்கான சான்றுகள் கிடைத்தன.
வஞ்சமும், சூழ்ச்சியும், போக்கும் நிறைந்த சூழ்நிலையில் வரலாற்று நாவல் கற்பனை செய்யப்பட்டது. சரித்திர நாவல் படிப்பவர்களுக்கு இந்த நாவல் சுவையான விருந்து.