ஷ்ரீ வாசுதேவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் லைப்ரரி கமிட்டி, 88.பட்டமங்கலம் தெரு, மயிலாடுதுறை -609001. ( விலை குறிப்பிடவில்லை)
ஷ்ரீ சாது நிஸ்சல தாஸ் என்பவர் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அத்வைத ஆன்மிகவாதி. அவர் தாய் மொழி இந்தி, சமஸ்கிருதம் பயிலாதவர்களும் ஆன்மிக அறிவு பெற அவர் எழுதிய நூல் இது. இதை ரசித்த குத்தாலம் சிவராவ் தமிழில் உருவாக்கிய படைப்பு கி.பி.1893ல் வெளியானது. தற்போது இப்படைப்பு வெளிவந்திருக்கிறது. ஆன்மிக அன்பர்களில் `ராஜமார்க்கம் ' என்னும் நிலையை அறிய இந்த நூல் உதவிடும்.