(ஆங்கில நூல் -பக்கம்: 162. விலை: குறிப்பிடப்படவில்லை) சிங்கப்பூரின் கதை - வாலறிவு பேசுகிறது லீகுவான்யூ: ஆசிரியர்: டாக்டர் கே.சிவம், வெளியீடு:Asian trading House Pvt Ltd., Messenger Colombo 12, Srilanka , . (பக்கம்: 200. விலை: குறிப்பிடப்படவில்லை)
ஒளிரும் வைரம் லீகுவான்யூ - சிங்கப்பூர் என்று துவங்குகின்ற இப்புத்தகங்கள் உண்மையிலேயே ஒளிரும் வைரங்கள் தான். நல்ல கட்டமைப்பு, அழகான வடிவமைப்பு. உயரிய வழவழப்பான தாள், புத்தகத் தயாரிப்பு என அனைத்திலுமே அற்புதமாய் அழகாய் அறிவுக்கு விருந்தாய் ஆங்கிலத்திலும் தமிழிலும் தந்துள்ளார் டாக்டர் கே.சிவம். உலக அரங்கில் லீகுவான்யூவை அறியாதவர் யாருமிலர். உலக வல்லரசு நாடுகளே இன்றைய சிங்கப்பூரின் வளர்ச்சியைக் கண்டு வியந்து பேசுவதைப் பார்க்க முடிகிறது.
மலாய் நாட்டிலேயிருந்து விடுதலை வாங்கி தனி நாடாகப் பிரிந்து வந்த சிங்கப்பூர், குடிக்கத் தண்ணீர் கூட குழாய் வழியாய் மலாய் நாட்டிலிருந்து பெற்ற நாடு. ஒரு கால் நூற்றாண்டிற்குள் அந்த நாட்டை ஒரு சொர்க்கலோகமாய் மாற்றி அமைத்த மாமனிதன் லீகுவான்யூ. உழைப்பு, உழைப்பு இது தான் இவனது மூலதனம். கட்டுப்பாடும், நேர்மையும், ஒழுக்கமுமே அவனது வாழ்வியல் வேள்வி. லீகுவான்யூ மனிதனல்ல. ஒரு சகாப்தம். 27 ஆண்டுகள் நிராகரிக்கப்படாத நேசமுடன் மக்களால் தேர்ந்
தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர், செயல்வீரன், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரன், ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஓம்பக்கூடிய உத்தமன். அந்த உலகச் சாதனையானது வியக்க வைக்கும் இமாலய சாதனைகளையும், வெற்றிகளையும், பயன்பாடுகளையும் அழகாய் நேர்த்தியான ஆங்கிலத்திலும் அமிழ்தினிய யாழ்ப்பாணத்துத் தமிழிலும் இருவேறு புத்தகங்களாக வடித்துக் கொடுத்துள்ளார் ஆசிரியர் . ஙிடிண்ஞீணிட் குணீஞுச்டுண் என்ற ஆங்கில சொற்றொடருக்கு "வாலறிவு பேசுகிறது' என மொழிபெயர்த்துத் தந்துள்ள மொழியாக்கம் ஆசிரியரின் செந்தமிழ்ப் புலமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. முன் அட்டை முதல் பின் அட்டை வரை ஒரே பொழுதில் படித்து முடித்து வைக்கின்ற புத்தகம் எதுவோ அது தான் ஜீவனுள்ள புத்தகம் என்றான் கோல்ரிட்ஜ். அந்த வகையில் இப்புத்தகத்தைப் படைத்துள்ளார் நூலாசிரியர்.
இது வாழ்வியல் சரிதை நூல் அல்ல. தனிமனித ஆளுமை; ஒரு நாட்டையே நிமிர்த்தி நிற்க வைக்க முடியும் என்பதற்குரிய அத்தாட்சியான வரலாற்றுப் பதிவுகள். வைரத்தின் பல முகங்கள் எனத் துவங்கி சமயம், ஆன்மிகம் எனப் பத்தொன்பது அத்தியாயங்களில் 45 உள் தலைப்புகளில் வரலாற்று நாயகன் லீகுவான் யூவின் பேராற்றலையும், பெருமுயற்சியோடு இன்றைய சிங்கப்பூரை உருவாக்கிய ஆளுமையையும் ஒரு வரலாற்றச் சாசனம் போல பதிவு செய்துள்ளார். உலகின் பல மொழிகளில் லீகுவான்யூவைப் பற்றிய செய்திகள் வெளிவந்திருக்கின்றன. உலக அரசியல் அரங்கில் இந்த வரலாற்று சாதனை நாயகனை முன் உதாரணமாய் வைத்து பல நூல்கள் வந்துள்ளன. ஆனால், இந்நூல் அவைகளின்று வேறுபட்ட நூல். ஆசிரியரே குறிப்பிடுவது போல இது ஒரு மீளாய்வு. ஒரு தேடல், ஒரு வரலாற்று ஆவணம்.
நூலில் லீகுவான்யூவின் குணநலன்களை உலக நாடுகளின் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், ஊடகங்கள் எனப் பல்வேறு நிலைகளில் இவரைப் பற்றி வெளியிட்ட கருத்துக்களில் 108னைத் தொகுத்துத் தந்திருப்பது ஆசிரியரின் ஆய்வுப் புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
"எந்த விடயத்தையும் ஆரம்பிக்கும் முன்னர், அதைச் செய்வதனால் பலன் கிடைக்குமா என்பதை ஆராய்வேன்' - பக்கம்:15.
"அறியாமை, கல்வியறிவின்மை, வறுமை, பொருளாதாரப் பின்னடைவு என்பனவற்றை அழித்த பின்னரே, ஒவ்வொருவரினதும் பொருளாதார உன்ன