நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.0
ஆப்ரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காகப் பல போராட்டங்களை நடத்திய நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையைச் சொல்லும் நூல் இது. முதலில் வன்முறையில் நம்பிக்கை கொண்டிருந்த மண்டேலா, மகாத்மா காந்தியடிகளின் சாத்வீகப் போராட்டங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு, அறவழிப் போர் முறைக்குத் தன்னை மாற்றிக் கொண்டவர். அவருக்கு 27 ஆண்டுச் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டபோது, அவரின் வயது 46. நெல்சன் மண்டேலாவைப் பற்றிய பல நூல்களுடன் அவரே எழுதிய தன் வரலாற்று நூலையும் படித்து விட்டு, இந்த நூலை இர.செங்கல்வராயன் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். அடிமைத்தனத்தில் இருந்து விடுபட, விடுதலை பெறப் போராடும் அனைத்து மக்களுக்கும் நெல்சன் மண்டேலா ஒரு வழிகாட்டி.