இரண்டாம் பாகம் (4 முதல் 9 வரை உள்ளடக்கிய ஷ்ரீமத்வ ராமாயணம்) மூலம் மற்றும் தமிழ் மொழி பெயர்ப்பு: குரோம்பேட்டை ஆர்.ஷ்ரீதரன். நூல் கிடைக்குமிடம்: குரோம்பேட்டை மாத்வ சேவா டிரஸ்ட், 2/14, ஸ்கூல் தெரு, ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை-44. போன்: 2265 1964. (பக்கம்: 540)
இந்து மதத்தில் நமக்குக் கிடைத்துள்ள பொக்கிஷங்கள் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள். துத் வைத மத ஸ்தாபகர் மத்வாச்சாரியார், உடுப்பியில் கிருஷ்ணனுக்கு கோவில் அமைத்தார். யாகங்களில் பிராணி வதையை எதிர்த்தார். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மகான் மத்வரின் மகாபாரத, ராமாயணத்தில் பாலகாண்டம் முதல் உத்திர காண்டம் வரை உள்ள `அகல்யா சாப விமோசனம், பரசுராமர் பங்கம், காகாசுரவதம், சீதாதேவி அபகரிப்பு, வாலி வதம், சீதாபரித்தியாகம் போன்ற பகுதிகளை இதுவரை யாரும் தெரிவிக்காத கருத்துக்களைக் காட்டியுள்ள சத்தான, முத்து முத்தான வரிகளில் மூலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்து தரப்பட்டுள்ளது. மேலும் மந்திராலய மகான் ராகவேந்திரரின் ராம சரித்திர மஞ்சரிக்கும் விளக்கங்களை கொண்ட இந்நூல் ஆன்மிகவாதிகளின் கருத்தைக் கவரும்.