நிவேதிதா பதிப்பகம், 1, மூன்றாவது மாடி, புதூர், 13வது தெரு, அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 239)
நாடு பிரிவினை அடைந்த தருணத்தில் தற்செயலாக அகதியாக மாறிய ஒரு இந்திய முஸ்லிம் பெண்ணை, பாகிஸ்தானிலிருந்து பாதுகாப்பாக மீட்டு வருகிறான் மனிதாபிமானமுள்ள ஒரு சிவிலியன். இதுவே முதலாவதுமாகவும், நூலின் தலைப்புக் கதையுமாக அமைந்துள்ளது. பல்வேறு காலகட்டங்களில் வெவ் வேறு இதழ்களில் வெளியான இருபது கதைகளின் தொகுப்பே இந்நூல்!
பெரும்பாலான கதைகள் ஒரு குறிப்பிட்ட மரபினரை (அந்தணர்) மையப்படுத்தியது மட்டுமின்றி, மூன்று சிறுகதைகள் கனகதாரை (பக்:164), கெட்டவார்த்தை (பக்:184), ஒரு வேலைக்காக (பக்: 136) பெண் வாசகர்கள் படிக்கக் கூசும் விதமாக, விரசத்தின் எல்லைக் கோட்டையும் தாண்டி விட்டன.
தணிக்கை என்ற ஒரு நியதி இருப்பின் இவையெல்லாம் அச்சேறாது.