வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160. விலை: ).
இலக்கியச் சிந்தனையில் 36வது ஆண்டுத் தயாரிப்பாக 2005ம் ஆண்டின் பன்னிரெண்டு சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. பிரபல எழுத்தாளர் சிவசங்கரி, பன்னிரெண்டு விமர்சகர்களால் ஏற்கனவே தேர்வு செய்த பன்னிரெண்டு மாதச் சிறந்த கதைகளுள் மிகச் சிறந்த இந்த ஆண்டின் சிறந்த சிறுகதையைத் தேர்வு செய்திருக்கிறார்.
தேர்வுக்கு தன்னிடம் வழங்கப்பட்ட சிறுகதைகள் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ள சிவசங்கரி, `60-70களில் எழுத்தாளர்கள் இருந்த `கமிட்மென்ட்' இப்பொழுது குறைந்து விட்டது' என்ற ஒரு திறனாய்வாளர் கூறியதையும் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். சிறுகதை வளர்ச்சியில் எழுத்தாளர்களும், இதழாளர்களும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதை இந்தத் தொகுப்பு நமக்கு உணர்த்துகிறது.