கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
பாஞ்சாலங்குறிச்சியில் நல்லாட்சி புரிந்த மன்னன் கட்டபொம்மன். இடையில் ஆற்காடு நவாப் செய்த துரோகத்தால் வெள்ளையர்களுக்கு வரி கட்ட வேண்டிய நிர்ப்பந்தம். மண்ணின் மைந்தர்களிடம் வரி கேட்க அந்நியனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சிலிர்த்தெழுந்தார் கட்டபொம்மன். இறுதிவரை போராட முடிவெடுத்தார். வாழ்க்கை போர்க்களமானது. வாளால் பேச வேண்டிய கணங்களே அதிகமாயிருந்தன. இறுதியில் அந்நியனுக்குக் காவடி தூக்குவதைவிட, தூக்குக் கயிறே மேல் என்று தண்டனையை ஏற்றுக்கொண்டார், நெஞ்சு நிமிர்த்தி.