சிவரஞ்சனி பப்ளிகேஷன்ஸ், 16, (12ஏ), சக்தி நகர், 2வது தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 320).
நடனக் கலை ஐந்தாம் வேதமாக பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்டது. பரமேஸ்வரன் ஆடிய தாண்டவத்திற்கு தானே தாளம் தட்டி நட்டுவாங்கம் செய்த தகவல்களை புராணங்கள் தெரிவிக்கின்றன.நாட்டியம் குறித்த செய்திகளை விட, இக்கலையைப் பயிற்றுவிக்கும் முறைகள் மற்றும் குறிப்பாக நட்டுவாங்கத்தைப் பற்றிய விவரங்களே இந்நூலில் அதிகம் எடுத்துரைக்கப்பட்டுள்ளன என நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். நாட்டியத்தின் ஒவ்வொரு அம்சமும் நுட்பமாக அலசி, ஆராயப்பட்டுள்ளன. ஒப்பற்ற பழம் பெரும் ஓலைச் சுவடிகள் மற்றும் நூல்களில் பொதிந்துள்ள அரிய கருத்துக்கள் எடுத்தாளப்பட்டதுடன், ஆசிரியரது முதிர்ந்த அனுபவத்தையும், குழைத்து வழங்கியுள்ள ஆய்வு நூல் இது என்றால் மிகையில்லை.தட்டு - மனை, கழியிலிருந்து துவங்கி, முப்பது வழி காட்டுதல் பாடங்களாக வகுத்து, நடனம் பயிலுவோர் மற்றும் நடன ஆசிரியர்கள், நட்டுவனார்களுக்குரிய தகுதிகள் என அற்புதமான புல்லரிக்கச் செய்திடும் தகவல்கள் ஏராளம். அரியதோர் வழிகாட்டி நூல் இது.