விலைரூ.150
புத்தகங்கள்
இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர்
விலைரூ.150
ஆசிரியர் : க. ஆறுமுகம்
வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
Rating
31,சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை -108.
இருபதாம் நூற்றாண்டில், இலக்கியங்களின் வாயிலாக மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, அழகாக தங்கள் கட்டுரைகளின் மூலம் காட்டியுள்ளார் கட்டுரையாளர். தமிழனின் வரலாற்றையும், நாணயங்கள் பற்றியும் நான்காம் தொகுதியிலுள்ள கட்டுரை கூறுகிறது.
மூவேந்தர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்ற அறிஞர்களின் கூற்றை மாற்றி, சங்க காலத்தில், மூவேந்தர்கள் நாணயங்கள் வெளியிட்டனர் என்பதை நிரூபித்துள்ளார் "தினமலர் நாளிதழ் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். பெரியாரின் எழுத்து சீர்த்திருத்தத்தை இவர், 1977ம் ஆண்டு நடைமுறைபடுத்தினார். ஸ்ரீலிபி எழுத்து வடிவத்தை கணினியில், 1987ம் ஆண்டு பயன்படுத்தி மறுமலர்ச்சி செய்தார் என்ற தகவல் சிறப்பானது. தமிழறிஞர்கள் அறவாணன் மற்ற பல தமிழ்க்கவிஞர்கள், கட்டுரையாளர்கள், இலக்கிய திறனாய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்களைப் பற்றி சுருக்கமாகவும், தெளிவாகவும் தரப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பாகும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!