விலைரூ.185
முகப்பு » கட்டுரைகள் » டாக்டர் அம்பேத்கரின்
புத்தகங்கள்
டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம்
விலைரூ.185
ஆசிரியர் : மு.நீலகண்டன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: கட்டுரைகள்
Rating
“டாக்டர் அம்பேத்கர் மாமேதை, பொருளாதாரம்,சட்டம், சமூக பிரச்னைகள் குறித்து, அவர் தெரிவித்த கருத்துக் கட்டுரைகள் சிலவற்றை தேர்வு செய்து அவற்றை எளிதாக்கி, அதன் விளக்கத்தையும் ஆசிரியர் எழுதியிருப்பது சிறப்பான முயற்சி. இன்று எல்லாரும் சாதி பற்றி பேசுகின்றனர். அம்பேத்கர் தன் கட்டுரையில் ,""சாதியைப் பற்றி ஆராய வந்தவர்கள் புரிந்த, பல்வேறு தவறுகளால் அவர்களின் ஆய்வுப் போக்கில், வழி தவறி உள்ளனர் என்கிறார். ஆரிய திராவிடக் கருத்துக்களில் இந்திய மக்கள் கவலைப்பட்டதில்லை. தோலின் நிறத்திற்கும் இந்தியா முக்கியத்துவம் தந்ததில்லை என்று தெளிவாக்கியுள்ளார். அதைவிட, ""இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள், வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்களிடம் ஆழ்ந்த பண்பாட்டு ஒற்றுமை உள்ளது, என்று கூறி, அதை அவர் பல்வேறு கோணங்களில் அலசியதை பார்க்கும் போது , அக்கருத்துக்களை ஊன்றிப் படிப்போருக்கு பிரமிப்பு ஏற்படும்.அம்பேத்கரின் சிறப்பை மேலும் அறிய உதவும் நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!