பத்திரிகை உலகில் தனியிடம் பெற்றிருக்கும் ஆனந்த விகடன், தன் வாசகர்களின் கவிதைகளை, சொல்வனம் என்ற பெயரில் வாரந்தோறும் வெளியிட்டு வந்தது. அவற்றை, புத்தகமாக வெளியிட்டு இருக்கிறது.
காகிதத்தை/ எரிக்கும் என்றெண்ணி/ குவியாடியால் குவித்தேன்/ வெயிலின்/ குவியப் பிம்பமொன்றை/ குவிந்ததோ ஒரு/ குட்டிச் சூரியன்! என்ற காட்சி படிமங்களையும், நூற்றியிருபது கேட்ட/ கடைக்காரனிடம் / நூறு தருவதாகச் சொல்கிறான்/ வாங்க வந்தவன்.../ பேரம் படியாமையின் கணங்களில்/
நீள்கிறது/ கறிக்கோழி ஒன்றின் / வாழ்க்கை!
என்ற, வாழ்வின் நிதர்சனங்களையும், பேருந்தில்/ சிதறுகிறது நாணயங்கள்/ சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு/ கிடைத்தன/ சில நாணயங்கள்/ தொலைந்தன/ சிலர் நாணயங்கள்! என்ற, எள்ளலும், நம்மை பெரிதும் ரசிக்க வைக்கின்றன. இவை, ஒரு பானை சோற்றில், ஓரிரு பதங்கள் தான். கவிதை யாசிப்போருக்கு, இப்புத்தகம் கொடை!
- சி.சுரேஷ்