‘உலக நீதி இலக்கியங்களும் தமிழ் நீதி இலக்கியங்களும், திருக்குறள் ஒரு சமூக இயல் பார்வை, திருவள்ளுவர் செய்த புதுமைகள், கன்பூசியசும் திருவள்ளுவரும், திருக்குறள் ஏன் கல்வெட்டுகள் ஆக்கப்பட வேண்டும்.
திருவள்ளுவர் தெய்வக் கோட்பாடு, தமிழகத்தில் திருவள்ளுவம் தோற்றதேன்?’ ஆகிய ஒரு கட்டுரைகளின் தொகுப்பு.
‘கடவுள், வழிபாடு, மதம் ஆகியவற்றை முன்னிறுத்தாத சீனம், கிரேக்கம், ரோம் ஆகியன மேம்பாடு அடைந்ததும், மாறாக அவற்றைப் போற்றிய தமிழகம், இஸ்ரேல் ஆகியன துன்புற்றதும் சுட்டிக்காட்டத்தக்கன (பக்.36).
திருவள்ளுவம் முற்காலத்தில் இலக்கியப் பொருளாக இருந்தது. அண்மைக் காலங்களில் அது மேடைப் பொருளாகி விட்டது.
இவ்விரண்டிலும் அது பேசப் பெறும் பொருளாகவே உள்ளது. அது பின்பற்றப்படும் பொருளாக என்று ஆகுமோ (பக்.67) போன்ற நூலாசிரியரின் கருத்துக்கள் சிந்தனைக்குஉரியவை.
– பின்னலூரான்