‘சுவேதம்’ என்றால் வெண்மை; துாய்மையையும் குறிக்கும். ‘அச்வதரம்’ என்பது குதிரை இனம். ஐவகை பிராணன்களையும் – புலன்களையும் குதிரை உவமையால் காட்டி வேதாந்த ரகசியத்தை ப்ரம்மம் மூலம் கூறுகின்றன. அனந்தம், சத்தியம், ஞானம் பற்றிய ரகசிய கேள்விக்கு விடை இப்புத்தகம் என்றால் மிகையாகாது. இறவா நிலைக்கு இட்டுச் செல்லும் வேதாந்த ரகசியம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – த.பாலாஜி