கிறித்துவ ஆயர்களின் பணிகளையும், அருள்பணியாளரின் பணிகளையும், துறவியரின் பணிகளையும், பொதுவானவர்களின் பணிகளையும் வரையறுத்துத் தெரிவிக்கிற நுட்பமான நுால். கிறித்துவர்களுக்கு மூன்று பிறப்பு இருப்பதாகத் தத்துவார்த்தமாக விளக்குகிறது. அன்னையின் வயிற்றில் பிறக்கும் பிறப்பு, திருமுழுக்குக்குப் பின்னரான பிறப்பு, இறப்புக்குப் பிறகான விண்ணுலகப் பிறப்பு என தெளிவுபடுத்துகிறது.
நிகழாத ஒன்றை நிகழ்த்துவதே கனவு என்னும் புதுமையான விளக்கத்தைத் தருகிறது. நம்பிக்கையை விதைக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டுள்ளது. கிறித்துவ இறைவாழ்க்கை வாயிலாக நம்பிக்கை பெற்று, உயர்ந்த நிலையை அடைவதற்கான வழியை உணர்த்துகிறது.
சிறந்த வடிவமைப்பு நல்ல அறிமுகத்தை வழங்குகிறது. எளிமையாகப் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இனிய நுால்.
– முகிலை ராசபாண்டியன்