தமிழகத்தில் பவுத்த மத வரலாற்றை வெளிப்படுத்தும் ஆய்வு நுால். மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. தொல்லியல் மற்றும், இலக்கிய, இலக்கண சான்றுகள் அடிப்படையிலும், தகவல்களை துல்லியமாக தேடி தொகுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பவுத்த சமயம் சிறப்பு பெற்றிருந்த பகுதிகள் பற்றியும் ஆய்வு செய்து தகவல் தொகுக்கப்பட்டுள்ளது. அங்கு கிடைத்த பவுத்த சின்னங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் உள்ள பழமையான புத்தர் சிலை புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
மொத்தம், 11 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. கூவத்தில் துவங்கி, போதி தருமர் என்ற தலைப்புடன் நிறைவு பெறுகிறது. முதற்பதிப்பில் எழுதிய முன்னுரையும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதம் தொடர்பான வரலாற்றை அறிய விரும்புவோருக்கு உதவும்.