மனிதனின் அன்றாட வாழ்க்கையில் கணிதம் இன்றி எதுவும் இல்லை என்பதை தெளிவாக அடிக்கோடிட்டு காட்டுகிறது இந் நுால். கணிதத்தின் துணையால் தான் பல அறிவியல் ஆய்வுகளில் பெரும் திருப்பங்களே ஏற்பட்டுள்ளன.
கணிதத்தின் கோட்பாடுகளோ, அதில் அமைந்துள்ள சூத்திரங்களோ நம் வாழ்வில் அவ்வளவாக பயன்படாது. அதன் அழகை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்து உழைப்பவர்களுக்கு மட்டும் தான் கணிதம் வசப்படும் என்பதை ‘ஏ மேத்த மெட்டிசியன்ஸ் அப்பாலஜி’ என்ற இங்கிலாந்து கணித மேதை ஹார்டியின் புத்தகத்தை மேற்கோள் காட்டி நூலாசிரியர் விளக்கியிருப்பது அருமை.
மேலும் அலீல்களும் அல்ஜீப்ராவும் பகுதியில் கணித ஆராய்ச்சிக்காக ஹார்டி தன் வாழ்க்கையை அர்ப்பணித்ததையும், அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களையும் சுவாரஸ்யம் குறையாமல் குறிப்பிட்டுள்ளார். இதுபோல் ‘கச்சிதமான காலணி நாடா, உறுதியின் உத்தரவாதம், சமமாக பிரிக்கும் சவால்’ என 15 பல்வேறு தலைப்புகளில் மனித வாழ்க்கையில் கலந்திட்ட கணித நுட்பங்களை, மனிதன் பயன்படுத்தும் பொருட்கள் மூலம் விளக்கி, சாதாரண மனி தர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் இந்நுால் அமைந்துள்ளது. கணித ஆர்வலர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
– வியாஸ்