வாழ்க்கையை நடத்த ஒளி விளக்காக திகழ்பவர் யார் என்றும், அந்த வாழ்க்கையின் ஒளி இல்லாமல் இந்த உலகத்தில் நீண்ட காலம் வாழ முடியாது என்றும் கூறலாம். அந்த ஒளியின் வெளிச்சத்தால்தான் வாழ்கிறோம் என்பதை புரிந்து கொள்ள எழுதப்பட்டுள்ள நுால்.
பிறவிகளுக்கு ஒரு உறவு கட்டாயம் இருக்கும் என்றால் அது அம்மா தான். எல்லா ஜீவராசிகளுக்கும் தாய் இருப்பாள். வஞ்சகம், ஏமாற்று, வெறுப்பு, என பல மோசமாக சக்திகள் நிறைந்த உலகில் தாய் தான் குழந்தைக்கு கட்டுப்பாடற்ற அன்பையும், பாசத்தையும் வெளிகாட்டுபவள்.
உடன் பிறந்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் பிரிந்து செல்லக்கூடும். ஆனால் எந்த காலத்திலும் பிரியாது இருக்கும் தாயின் மகத்துவத்தை போற்றும் விதமாக படைக்கப்பட்டுள்ள நுால்.
– வி.விஷ்வா