ஆசிரியர் ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் தொகுப்பின் கடைசி புத்தகம் புல்லாங்குழல். கற்பனைக்கு எட்டாத அதிசயங்களை, அழகான கதையாக பிணைத்து உள்ளார். கதைக்கு கதை அறிவியல் வித்தியாசங்களை காட்டி, அதிசயிக்கச் செய்யும் ஆசிரியரின் கை வண்ணத்துக்கு, ஒரு கோப்பை தேநீர், காகித அம்பு கதைகளே சான்று. முனியம்மா ரயில் வண்டி நிலையம்... இனிமேல் நடக்கப் போகும் கூத்தின் ஆரம்பகட்ட யதார்த்தம்.
ஆசிரியரின் கற்பனைக் கதைகளுக்கான அறிவியல் தேடல் மிக அதிகம் என்பதை அவரது வார்த்தைகள் விவரிக்கின்றன. நிஜத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், நம் கண்முன் நடமாடினால், எப்படி இருக்கும். கதையை படிக்கும் போது, அப்படித் தான் நமக்கும் உருவங்கள் விரிந்து நடமாடுகின்றன; நடனமாடுகின்றன; பிரமிக்கச் செய்கின்றன.
– எம்.எம்.ஜெ.,