வாழ்வியல் கோட்பாடாக விளங்குவதால், இஸ்லாமும் அரசியலும் கலந்துள்ளன எனத் தெளிவுபடுத்தும் நுால். நபி பெருமான் ஆட்சியாளராகப் பணியாற்றியதையும் குறிப்பிடுகிறார். இறைவன் வழிகாட்டவில்லையென்றால், மனித சமூகம் அழிவை நோக்கி சென்று விடும் என்பதை, குர்ஆன் வசனங்கள் வாயிலாக எடுத்துக்காட்டியுள்ளார்.
ஆட்சியாளர்களை மக்கள் மீது திணிக்கக் கூடாது; ஆட்சியாளர்களை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்; தேர்ந்தெடுக்கும் முறைகள் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றவாறு மாறுபடலாம்.
கலீபாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை, இஸ்லாமிய நீதி பரிபாலனம், மதினா சாசனத்தின் விதிகள், ஜிஸ்யா வரியின் நோக்கம் போன்றவை, விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
– புலவர் சு.மதியழகன்