சிறுகதை மற்றும் கட்டுரைகளால் அறியப்பட்ட எழுத்தாளர் அப்சலின் முதல் நாவல். தனிமை என்பதே ஒரு கும்பலின் அளவளாவல் தான். மனசும், மனசாட்சியும், நிகழ்வுகளும் ஓயாது எதையாவது உரைத்துக் கொண்டே இருக்கும். இப்பேருண்மையின் பெருஞ்சான்றா உள்ளது இந்த நுால்.
இறப்பு, மரணம் என்ற வார்த்தையை கேட்டால், அச்சப்படும் ஒருவனின் வாழ்க்கையை பேசுகிறது. பேரன்பின் கனிவே மரணம் என அறிவதை, காதல், கருணை, மோகம், கலகலப்பு, உருக்கம் கலந்து சொல்லி உள்ளார். விதி எழுதும் கதைகள் விஸ்தாரமானது; விறுவிறுப்பானது.
– பெருந்துறையான்