கம்ப ராமாயணத்தை முழுதாக படிக்க இயலாதவர்களுக்கு, அந்த கதையை 100 பாடல்களில் விளக்க முற்படும் நுால். ராமாயண பெருமை, ஆழ்வார்கள், ராமானுஜர், இளங்கோவடிகள் பாடல்கள் வாயிலாகக் கூறப்பட்டுள்ளது. தசரதன் வானுலகம் சென்றதை, அவலச்சுவைபட பாடலில் கூறுவது சிறப்பு.
குகனின் அன்பு வைணவ சித்தாந்தத்துடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. கம்ப ராமாயணத்தில் ஆழங்கால் பட்டுள்ளதை உணர முடிகிறது. பரதன், ராமனைக் காண கானகம் வந்த போது, இலக்குவனும், குகனும் ஒரே சமயத்தில் போருக்கு ஆயத்தமாகி வருவதாக கூறுவது புதிய செய்தியாக உள்ளது. அந்தாதி இலக்கணம் பிறழாமல், ராமாயணத்தை 100 பாடல்களில் எழுதி, அதற்கு அருமையான பொருளுரைக்கும் நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து