வள்ளலார் அருளிய அருட்பாவில், ‘அருட்பெருஞ்ஜோதி’ என்ற மெய்யுணர்வுக்கு ஆதாரமாக திரு.வி.க., எழுத்துகளை சான்று காட்டி நிறுவும் நுால். ‘அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்’ என திருமூலர் சுட்டும், ‘சிவம்’ என்பது, கிறிஸ்துவே என திரு.வி.க., உணர்த்துவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சமயப் பொதுமை என்பது எல்லா கடவுள்களும் எல்லா மதமும் ஒன்றே என்ற கொள்கை அல்ல; எல்லா சமயங்களிலும் இறைவன் வெளிப்படுத்தி இருக்கிறார் என்ற புரிதல் ஆகும் எனக் குறிப்பிடுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைவ சமய நுால்கள், வள்ளலாரின் திருவருட்பா, சித்தர் பாடல்கள், சைவ சித்தாந்த நுால்கள், தமிழ் நீதி நுால்களுடன் திருக்குறளும் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளது. சமய பேதமும், பிற சமய வெறுப்பும் பரப்பப்படும் சூழலில் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் வெளிவந்துள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்