வில்லிபுத்துார் பாரதத்தைத் தழுவி, தமிழில் மகாபாரத நிகழ்ச்சிகளை எளிய உரைநடையில் விளக்கும் நுால். மொத்தம் 21 கட்டுரைகளில் மகாபாரத நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தருகிறது.
மகாபாரதத்தில் மக்களின் உள்ளங்களைக் கவரும் பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் முதலியன குறிப்பிடப்பட்டுள்ளன. இல்லற நுட்பம், சகோதர பாசம், தாயாதி பகை, அரசியல் நுட்பம், அரசனின் பண்பு, குடிமக்களைப் பாதுகாத்தல், அற வாழ்க்கை, வீடு பேற்றுக்குச் சிறந்த வழி கூறப்பட்டுள்ளது.
பொறுமையின் வடிவமாக தர்ம புத்திரரையும், கொடைக்குக் கர்ணனையும், இத்தகைய பண்பு உள்ளவர்களின் வரலாறு படிப்பவர்களுக்குப் பயன் தரும். பீஷ்மர், குந்தி தேவி, சூரியன், கர்ணனின் பிறப்பு போன்ற பாத்திரங்களின் வரலாறு விளக்கப் பட்டுள்ளது.
தேவலோகம் என்னும் தலைப்பில் போர் முடிந்ததும் நடந்த காட்சிகளை வர்ணிக்கிறது. சகோதர பாசத்தால் துடித்த தருமரின் நிலை வர்ணிக்கப்படுகிறது. மகாபாரத நிகழ்ச்சிகளை கதைகளோடு எளிமையாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதப்பட்டுள்ள நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்