இஸ்லாமியர் தமிழுக்கு செய்த பங்களிப்பு பற்றி விவரிக்கும் நுால். நாமா, கிஸ்ஸா, முனாஜத் போன்ற புதிய வகை இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்களில் பங்களிப்பு, இஸ்லாமியத் தமிழறிஞர்கள் என்ற பொருண்மைகள் சார்ந்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
நாட்டுப்புற இலக்கியம், தாலாட்டு இலக்கியத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு, இஸ்லாமியர்கள் படைத்த தமிழ் காப்பியங்கள், தமிழில் அச்சு வடிவில் முதலில் வந்த காப்பியம், உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணம் போன்ற தகவல்களைக் கொண்டுள்ளது.
இஸ்லாமிய சமயப் பின்புலம் கொண்டோர் தமிழுக்கு அருட்கொடை செய்துள்ளதை தொகுத்து தரும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்