ராமருக்கு சூரிய கொடி, ராவணனுக்கு வீணை பொறித்த கொடி, ஜான்சி ராணிக்கு அனுமன் பொறித்த கொடி என்று கொடி வளர்ந்த வரலாற்றை விளக்கும் நுால். கொடி காக்க உயிர் கொடுத்த தியாகிகள் வரிசையில் திருப்பூர் குமரன் முக்கிய இடம் பிடித்துள்ளார். இளம் வயது இளம் மனைவி மனதில் புரட்சித் தீ. கொடி கீழே விழாமல் உயிர் கொடுத்த வரலாறு நெஞ்சுக்குள்ளே நெருப்பை பற்ற வைக்கிறது.
வெள்ளையனே வெளியேறு என்று போலீஸ் ஸ்டேஷனில் கொடியேற்ற முயன்று தடி அடிக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் பலியான நபர்களின் பட்டியலை படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. கொடி காத்த வரலாறு ஜாதி, மத பேதமின்றி போராடியது ஒரு சரித்திரம். தேவகோட்டையில் வள்ளியம்மை சுட்டுக் கொல்லப்பட்டது, பெண்களின் பங்களிப்பையும் சொல்லுகிறது. வரலாற்று ஆவணமாக உள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்