எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை ஒட்டி தொகுக்கப்பட்ட விரிவான நுால். எம்.ஜி.ஆரின் பிறப்பு முதல் இறப்பு வரை தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளி நாட்களிலேயே ஏழைகள் மீது அவர் காட்டிய கரிசனம்; இளமையில் ஏற்பட்ட வறுமையால் நாடக கம்பெனியில் சேர்ந்தது, நடிப்புப் பயிற்சி பெற்றது, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது, ரங்கூன் பயணம், சினிமாவில் வாய்ப்பு என, அவரது அனுபவங்கள், தேடித் தேடி தொகுக்கப்பட்டுள்ளன.
அவரது அரசியல் ஆர்வம், லட்சிய வேட்கை, தி.மு.க.,வில் ஏற்பட்ட எதிர்ப்பு, தொடர்ந்து வந்த புறக்கணிப்பு, தலைவராக உருவெடுத்தது, ஊழலுக்கு எதிராகப் போராடியது, ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இன்றும் எம்.ஜி.ஆர்., பெயர் நிலைத்திருக்க வெறும் திரைக்கவர்ச்சி மட்டும் காரணமல்ல; அவரது திறமையும், அயராத உழைப்பும், சமூக அக்கறையும் தான் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தும் நுால்.
–
சையத் அலி