தர்மத்தையும், சத்தியத்தையும் உலகில் நிலைநாட்டுவதற்கு அவதாரம் எடுத்ததாக குறிப்பிடப்படும் அய்யப்பனின் பிறப்பு முதலான வரலாற்று நிகழ்வுகள் நிரல்படுத்தப்பட்டுள்ள நுால். பந்தள மன்னனிடம் மகனாக வளர்ந்த நிகழ்வு; குருவுக்கு வரதட்சணையாக குருவின் மகனுக்கு பார்வை வழங்கிய நிகழ்வு; மகிஷாசமுகியை சம்ஹாரம் செய்தது; புலியை வாகனம் ஆக்கியது; சபரி என்ற பெண்ணுக்கு காட்சியளித்த நிகழ்வுகள் எல்லாம் கூறப்பட்டுள்ளன.
பொன்னம்பலம் மேடில் தரிசனம் தந்ததும் பதிவாகியுள்ளது. அய்யப்பன் விரத பூஜைகள், கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை, 18 படிகளின் தத்துவம், அய்யப்பனுக்கு செய்யும் வழிபாட்டு முறை, சபரிமலை கோவில் திறந்திருக்கும் நாட்கள் பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ளன.
சபரிமலைக்கு யாத்திரை மார்க்கங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. நிறைவாக அய்யப்பனை போற்றி துதிக்கும் மந்திரங்கள், அஷ்டோத்திரம், சஹஸ்ர நாமாவளி, வழிநடைப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அய்யப்ப பக்தர்களிடம் இருக்க வேண்டிய நுால்.
–
புலவர் சு.மதியழகன்