நிஜமா, கற்பனையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவு, விஞ்ஞான கதை பேசும் நுால். இளமை துள்ளும் எழுத்துக்கு, காதலும் அறிவியலும் கைகோர்த்து நின்று வெற்றி மகுடம் சூட்டுகின்றன.
காலக்கடிகாரத்தை கொண்டு நல்லதை முடிக்கப் போகிறார் என்று நினைக்கும் போதே, முடிவிலும் சோகத்தை தருகிறது. ரோபோ குழந்தையை பேச வைத்து அதிரச் செய்கிறது. பூனையும், எலியுமான, ‘டாம் அன்ட் ஜெர்ரி’ கதை வெகு சுவாரசியம்.
பல்லி, எதிர்பாராத கதை. சஞ்சயா, சுந்தரமாக பரிதாபமாக பலியாகும் அறிவியல் ஆடு. கண நேரத்தில் ஒரு காதல். அந்த காதலும் உருத்தெரியாமல் பொடிப்பொடியாய் உதிரும் சோகம் என, விஞ்ஞான ரேகைகள், விரல் வடிவில் எழுத்துக்க ளாய் உருமாறி அதிசயம் செய்கின்றன.
வானவில் போல மனதுக்கும், விரிந்து சிறகடிக்கும் கற்பனைக்கும் வண்ணம் சேர்க்கின்றன. எல்லாமுமாக சேர்ந்த ‘ஏ கிளாஸ் கதை.
–
எம்.எம்.ஜெ.,