திருக்குறள், திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள அன்புடைமை, அறம், ஒழுக்க வாழ்க்கை போன்றவற்றை ஒப்பிட்டு, வாழ்க்கையில் அறத்துடன் வாழ வழிகாட்டும் நுால். எட்டுத்தொகை நுால்களான அகநானுாறு, புறநானுாறு, குறுந்தொகை, கலித்தொகையில் இருந்தும், பின்பற்றப்பட வேண்டிய அறம் எடுத்துக்காட்டுகளுடன் கூறப்பட்டுள்ளது.
வாழ்க்கைக்கு அன்பே அவசியமானது என்பதை மதங்கள் கூறுவது சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. கல்வி கற்க வேண்டிய அவசியம் குறித்தும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இலக்கியங்களை படிப்பது மட்டுமில்லாது, கருத்துகளை கடைப்பிடித்து பயனடைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆன்மிகம் பற்றிய கருத்துகளோடு, வாழ்வு நிலையில்லாதது தொடர்பாகவும் விளக்கம் கூறப்பட்டுள்ளது. திருக்குறள் குறித்த ஆவணப் பதிவுகளும் அளிக்கப்பட்டுள்ளன. அற வாழ்க்கைக்கு வழிகாட்டும் நுால்.
–
முகில் குமரன்