உண்மைச் சம்பவத்தை அனிருத் அடிப்படையாகக் கொண்டு உருவான நாவல். தமிழகத்தை உலுக்கிய சுனாமி பேரழிவின்போது நடந்த நிகழ்வுகளையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனையையும் பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
சுனாமியில் காணாமல் போன சிறுவன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பது அன்றைய செய்திகளில் ஒன்று. அதை அடிப்படையாகக் கொண்டு, சிறுவனின் தந்தையாக தன்னைக் கருதி கற்பனையில் உருவானது தான் இந்த படைப்பு. காணாமல் போன சிறுவனின் பெற்றோரின் மனத்தவிப்பு, புத்திர சோகம், மகனை தேடுவதில் காட்டிய அக்கறை, அவன் மீண்டும் கிடைப்பான் என்ற நம்பிக்கையில் பாசப்பிணைப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு சிறுவனையும், சிறுமியையும் துப்பறிவாளர்களாக அறிமுகப்படுத்தி புதுமையும் கையாண்டுள்ள நுால்.
–
இளங்கோவன்