அன்றாடம் கேள்விப்படும், நேரில் பார்க்கும் சம்பவங்களை அழகாக கற்பனை கலந்து கதைகளாக வடிக்கப்பட்டுள்ளளன. ஒரு கவிஞருக்குப் பாராட்டு விழா என்ற பெயரில் நடந்த அவலத்தை விளக்குகிறது.
கோவிலில் உள்ள பொருட்களை வைத்தே, ‘கடவுள் இல்லை’ என்று கோவில் சுவரில் எழுதுதல், இடது – வலது தெரியாமல் தெருவைத் தேடி அலைந்த அனுபவம், ஒரு நடிகையின் கணவன் அவள் நடித்த படத்தைப் பார்த்து புலம்பல், திருமணமாகாத முதிர் கன்னியின் மனதை நோகடிக்க விரும்பாத ஒரு தந்தையின் பரிவு என கருக்களை கொண்டுள்ளது.
பதவி உயர்வு கிடைக்கவில்லை என, வேலையை விட்டு பெட்டிக்கடை வைத்தவரின் அலங்கோலம் என கருத்துகளும், வர்ணனைகளும் வாசகர்களின் ஏதோ ஒரு அனுபவத்துடன் பிணைந்திருப்பதை உணரலாம்.
அந்தந்த கால சூழ்நிலை, மனித மனநிலையை ஒட்டி அமைந்திருக்கின்றன. பல்சுவையளிக்கும் இந்தத் தொகுப்பு இளமை காலத்திற்கு கொண்டு செல்லும் என்பது நிச்சயம்.
–
இளங்கோவன்