சம வாய்ப்பு பெற இயலாத ஏழை எளிய மக்களின் அரிய வழிகாட்டியாக அம்மக்களை உயர்த்தப் பாடுபட்டவர் தான் கேரளத்தில் அவதரித்த ஸ்ரீநாராயண குரு. ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம், மதம் எதுவானாலும் மனிதன் நன்றானால் போதும் என்று மனிதத்தை முன்னிறுத்தி உபதேசித்த மனிதநேயவாதி. ஜாதி முறையில் எதையும் பேசாதே, கேளாதே என்பது இவரது திருவாக்கு. சமுதாயப்புரட்சியும், சமயப்புரட்சியும் செய்தவர்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அகிம்சை வழியில் நடத்திய போராட்டங்களும் அதனால் மக்களுக்கு விளைந்த நன்மைகளும் பிரமிப்பூட்டுபவை; மன நிறைவு தருபவை. ஸ்ரீநாராயண குருவைப் பற்றி அறியப்படாமல் இருந்த உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டும் நுால்.
–
இளங்கோவன்