சத்ரபதி சிவாஜியின் வரலாறை விவரிக்கும் நுால். இளமையிலே குதிரையேற்றத்தில் ஆர்வம் கொண்டது, நண்பர்களுடன் இணைந்து இளைஞர் படை உருவாக்கியது, டோரானா கோட்டை நிர்வாகம், புரந்தர் கோட்டையை தன் வசமாக்கியது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவாஜியின் சாணக்கியம், தந்திரம், சிறையிலிருந்து தப்பித்த நிகழ்வு, ராணுவத்தைக் கட்டமைத்து சத்ரபதியாக முடி சூட்டிக் கொண்டது என சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
சென்னை காளிகாம்பாள் கோவிலில் வழிபட்ட நிகழ்வு, தஞ்சை நாயக்கர் மன்னர்களிடம் ஏற்பட்ட குழப்பங்களை தீர்த்தது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சிவாஜி என்பது பெயர் மட்டுமல்ல; இளைஞர்களை ஊக்குவிக்கும் மகா சக்தி என விளக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்