சமூக அக்கறையுடன் வடிக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால்.
அளவு கடந்த மழையால் வந்த வெள்ளம் தந்த வேதனையை பாடுகிறது. சிரிப்போடு, சிந்திக்கவும் வைக்கிறது. அதில், ‘மழை நீர் நடுவே குடியிருப்பு, மக்கள் குடிநீர் இன்றி பரிதவிப்பு’ என்ற வரிகள் துயரத்தை விளக்குகிறது. மழைக்கே வேண்டுகோள் விடுக்கும் வகையில், ‘வளமோடு வாழ வைப்பாய்’ என்கிறது,
காதலைப் பற்றி, ‘காதலியை சிலை என்று வர்ணித்தால், சிலை உயிர் கொண்டு நடப்பதில்லை’ என நயத்துடன் விளக்குகிறது. அனுபவத்திற்கு இந்த உலகில் இணை ஏதும் இல்லை என்கிறது. விடுகதைகளுக்கு விடையையும் தந்துள்ளது. சமூகம், அரசியல், காதல், பக்தி, தத்துவம் என பல நிலை கவிதை நுால்.
– புலவர் ரா.நாராயணன்