இழந்த நாட்டை மீட்க பல வழிகளில் முயன்று வென்ற ராஜவர்மனை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட சரித்திர நாவல் நுால். கதையைக் காட்டிலும் இடையிடையே தமிழ் இலக்கியங்களின் வர்ணனைகள் அதிகம். எழுத்துப் பிழைகளை தவிர்க்க முயற்சித்து இருக்கலாம்.
யானைக்கு உணவை அளவாக கொடுப்பது நல்லதா... நிலத்தில் வேண்டியதை தின்றுகொள் என்று விடுவது நல்லதா... என்பது மாதிரியான கேள்வி களுடன் நகர்கிறது. பெண்களின் அழகை வர்ணிக்கும் விதம் நன்றாக உள்ளது. அதே சமயம் ராமாயணம் மகாபாரத இடைச் செருகல்களும் உள்ளன.
சமாதானம் பேசும் மன்னன் கரும்பு வில்லை வீசுவான் என்பதும், வென்றவன் தோற்றவனின் பொன்முடியை காலணி ஆக்கிக் கொள்வான் என்ற செய்திகளும் உள்ளன.
– சீத்தலைச் சாத்தன்