பவுத்த மதம் இந்தியாவில் செல்வாக்கு பெற்றிருந்த நிலை பற்றி ஆராய்ந்து தகவல்களை தரும் நுால். பழங்காலத்தில் வாழ்ந்த மன்னர் பார்வையில் விவரிக்கிறது.
இந்திய நிலப்பரப்பில் பவுத்த மதம் நிலைபெற்றிருந்த காலத்தையும், செயல்பாட்டையும் விவரிக்கிறது. ஆய்வு வழியாக பெற்ற தகவல்கள் தொகுத்து தரப்பட்டு உள்ளன. அந்த காலத்து மன்னர்கள், குலங்கள், தேசங்கள், கிராமங்கள் என பல நிலைகளில் பேசுகிறது.
அப்போதைய சமூக நிலை, பொருளாதார கட்டமைப்பு, எழுத்து வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, தொல் இறை கோட்பாடு பற்றிய விளக்கங்களை தருகிறது. மன்னர்கள் சந்திரகுப்தன், அசோகன், கனிஷ்கர் பற்றியும் ஆய்வு செய்துள்ளது.
இந்தியாவில் பவுத்த மத நிலை குறித்த நுால்.
– மதி