தமிழியல், சமூகவியல், தொழிலியல், காதல் கனிகள், இயற்கை உலா, அனுபவ முத்துகள், வாழ்த்துப் பாக்கள், இரங்கற்பாக்கள் என வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.
ஓரிரு கவிதையைப் படித்து முடிக்கும் முன்னே, நடை கைபிடித்து அழைத்துச் செல்கிறது. எழுத்துப் பிழை இல்லாமல் வெளிவந்திருக்கிறது. மக்களின் மனநிலையை உள்ளவாறு வெளிப்படுத்தியுள்ளது. ஆழமான சிந்தனை, அழுத்தமான உணர்வு என கவிதையின் தடத்தை தெளிந்த சிந்தனையுடன் தருகிறது.
கவிதை உலகம் இப்படி இருக்கிறது என்று எடுத்துக் காட்டி பெருமைப்படும்படியாய் அமைந்துள்ளது. அயலகத் தமிழர்களின் கவிதைப் படைப்புகளில் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
– முகிலை ராசபாண்டியன்