விடுதலைக்காகப் போராட துணிந்து பள்ளியில் நெஞ்சு நிமிர்த்தி கம்பீரமாகச் சொன்ன பகத் சிங் வாழ்க்கை வரலாற்று நுால்.
இளைஞர்களை எழுச்சிமிகு உரையால் விடுதலை உணர்வை பரப்பியது, லஜபதி ராயை கொன்ற ஆங்கிலேய அதிகாரி ஸ்காட் என கணித்து, சாண்டர்ஸ் என்பவரை கொன்றது, நாடாளுமன்றத்தில் குண்டு வீசியது, சிறையில் தத்துவார்த்த போராட்டம், துாக்கு மேடை ஏறும் முன் ஆற்றிய வீர உரை என நெகிழ வைக்கிறது.
பகத் சிங்கின் தைரியம், தேசப்பற்று, தனிமனித ஒழுக்கங்களுக்கு தந்த முக்கியத்துவம், அறிவாற்றல் ஆகியவையே அவரை தனித்துவப்படுத்தியது. விடுதலைக்காக துாக்கு கயிற்றை முத்தமிட்ட இளைஞரின் வீர வரலாற்று நுால்.
– புலவர் சு.மதியழகன்