வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்: 108, )
லா.ச.ரா., ஸ்பெஷல். லா.ச.ரா.,வின் சிந்தனைச் சிதறல்கள் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. பக்கம் பக்கமாக வசன கவிதைகள்.
`முழு நிலா தேய்வது என்பது கிராமத்தை விட்டு அத்தனை நாள் கழித்து அன்று தான் கண்டேன். லேசான இருள் கலந்த வெண்மையின் வெளிச்சம். எப்படி இருந்தால் என்ன? வானத்தின் முழு நீளத்தை வெற்றியுடன் சவாரி செய்கிறான்.
அவன் குளுமையில் எங்கள் இதயம், பேச்சு மலர்ந்தன. உலகில் எங்களுக்குத் தோன்றியவை எல்லாவற்றைப் பற்றியும் தான் பேசினோம். அந்த மர்ம இருளில் ஏதேதோ பலகணிகள் திறக்கும். சில ஆச்சர்யமாயிருக்கும். சில பயமாயிருக்கும்.'
என்று `வாக்கிங்' போய் வருவதையே லா.ச.ரா.,வின் பேனா கவிதையாக்கி விடுகிறது! இலக்கியத் தேனடை!