பச்சைப் பசேல், 15,முனிரத்தினம் தெரு. அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை. 600029. (பக்கம் 680 )
ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை உள்ள பெண்பாற் புலவர்கள் வரலாறு மற்றும் இலக்கியப் படைப்புகளின் தொகுப்பு இந்த நூல். இதைப் பெண் புலவர் களஞ்சியமாக உருவாக்கிய ஆசிரியரின் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. அதற்கான உழைப்பும் அபாரமானது.
சங்ககாலத்தில் பெண்கள் பொட்டு அணியவில்லை, பொதுக்கயத்து கீரந்தை , புல்லாளங்கண்ணி போன்ற பெயர்கள் பெண்பாற் புலவர்களுடையது என்பது சிறப்புத் தகவல்களில் சில. சங்க காலப் பெண் புலவர் பட்டியலும் உள்ளது. இரவில் வீட்டு வாயிலை அடைத்தல் அரிய பழக்கம் என்ற தகவலும் உண்டு. அதற்கான விளக்கமும் தரப்பட்டிருக்கிறது. இலக்கிய ஆர்வலர்களுக்கு சிறந்த நூல்.