விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. (பக்கம்: 128.)
ஆனந்த விகடனில் வெளிவந்த பங்குச் சந்தை தொடர்பான தொடரின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்குத் துணை புரியும் வகையில் 23 தலைப்புகளில் இந்நூல் அமைந்துள்ளது.
ராமனாதன், செந்தில் ஆகிய இருவரின் உரை யாடல் வாயிலாகப் பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை வழங்கியுள்ள முறை புதுமையாக உள்ளது. இடையிடையே செந்திலின் மனைவி போன்ற பிற பாத்திரங்களும் வந்து நாவல் படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது இந்நூல்.