திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்:116)
மகாகவி பாரதியார் பன்முகப் பார்வை கொண்டவர். தாம் சொல்லிய புதுமைக் கருத்துக்களை தம் வாழ்வில் கடைபிடித்தவர். அவர் காளிதாசன் என்ற புனைப்பெயரில், "தராசு' என்ற நூல் எழுதினார். இந்நூல், 14 பிரிவுகளைக் கொண்டது. பாரதியாரின் 127 ஆவது பிறந்தநாள் வெளியீடாக இந்நூல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தராசு நடுநிலையோடு எடை போடுவது போல, பாரதியாரும் நடுநிலையில் சில கருத்துக்களைக் கூறியுள்ளார். பாரதியார் பாரதிதாசனைப் பார்த்து, எழுக, நீ புலவன் என்று கூறியதைப் படிக்கும் போது, பாரதியாரின் தீர்க்க தரிசனம் அறிகிறோம். பாரதியாரின் சித்தக்கடல் என்ற கட்டுரையைப் படிக்கு போது அவர் பட்ட மனவேதனைகளை உணர்கிறோம். (பக்கம்.72-79)
பாரதியார் குறித்துப் பாரதிதாசன் எழுதியுள்ள ஆறு கவிதைகளும், பாரதியார் குறித்து அறிஞர் அண்ணா வானொலியில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சின் விளக்கமும் நூலிற்குப் பெருமை சேர்க்கின்றன. பாரதி அன்பர்கள் படிக்க வேண்டிய நூல்.