சந்தியா பதிப்பகம், 57 ஏ, 53வது தெரு, அசோக்நகர், சென்னை -83. (பக்கம்: 128.)
பகவான் ரமணரைப் பற்றிய இந்நூல், நல்ல தமிழில், சுவையான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, புகழ்பெற்ற எழுத்தாளரான பால் பிரண்டன் எழுதிய "இரகசிய இந்தியாவில் ஒரு தேடல்' என்ற புத்தகத்தில் உள்ள மிக உயர்ந்த சிந்தனைகளில் சிலவற்றை எளிய தமிழில் புத்தகத்தில் ஆங்காங்கே படிக்கும்போது, மகிழ்ச்சியும், ஆத்மதிருப்தியும் கிடைக்கின்றன. மேலும், சுவையூட்டும் தகவல்களும் உண்டு. தன் அன்னைக்கு "சின்ன வெங்காயத்தின் மீதான வெறுப்பு' அவரது மோட்சத்திற்கு தடையாக உள்ளது என்று ரமணர் கூறிய தகவல் அவரது அத்வைத நெறியை விளக்குகிறது. ரமண மகரிஷியின் மகாத்மியம் பேசும் புத்தகம்.