18-11வது தெரு, நந்தனம் விரிவு, சென்னை-35, (பக்கம்: 112.)
"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க' என்று பெரியோர் வாழ்த்துவர். இதிலுள்ள 16 பேறுகளான செல்வங்கள்: கல்வி, வயது, நட்பு, வளமை, இளமை, பிணியில்லா உடல், சலியா மனம், அன்பு மனைவி, அறிவு குழந்தை, புகழ், கொடை, நிதி, செங்கோல், துன்பமிலா வாழ்வு, அன்பு, தொண்டர் உறவு. இந்த 16 செல்வங்களை 16 பக்கத்தில் விரிவாக விளக்கி எழுதப்பட்ட மூன்று அபிராமி பதிகம், 32 பாடல்களின் விளக்கமும் மிக விரிவாகத் தவறின்றி இந்த நூலில் தரப்பட்டுள்ளது.
லலிதா சகஸ்ரநாமம், சவுந்தர்யலகரி ஆதாரங்களுடன் அபிராமியின் அருளை, குற்றால அருவியாய்ப் பொழிந்து, முடிவில் தஞ்சை சரபோஜி மன்னன் பட்டருக்குத் தந்த களமான்ய நெல்கொடை பற்றிய செப்புப் பட்டயப் பாடலையும் மிகவும் சிறப்பாகத் தந்துள்ளார்.