(மூன்றாம்தொகுதி),வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 314).
காஞ்சி மகாப் பெரியவரைத் தரிசனம் செய்ய புதுடில்லியில் இருந்து மைய அரசின் செயலர் ஒருவர் வந்திருந்தார். வந்தவர் சர்தார்ஜி. தனக்கு உதவியாளராக ஒரு தமிழரை வைத்திருந்தார். சுவாமிஜியிடம் அறிமுகமும் ஆசீர்வாதமும் முடிந்தவுடன், சுவாமிஜி, சர்தாஜியிடம், `ஏன் ஒரு தமிழனை உனக்கு சகாயத்துக்கு (அசிஸ்டன்டாக) வைத்துக் கொண்டாய்' என்றார். `தமிழ்ப் பேசும் மனிதனைக் கண்டால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சொன்ன வேலையை சரியாக உண்மையாக நேர்மையாகச் செய்வார்' என்றார் சர்தார்ஜி. `தமிழ் பேசுபவர்கள் வெளி மாநிலமல்ல, உலகில் எங்கு போனாலும் பேருடனும், புகழுடனும் விளங்குவர். ஆனால், தமிழ்த் தேசத்தில் இருந்தால், அவர்கள் சகவாச தோஷத்தினால் கெட்டுப் போய் விடுகின்றனர்' என்றார் மகாப் பெரியவர். இதுபோன்று 314 பக்கங்களிலேயும் மகரிஷியின் அமுதமொழிகள் குவிந்துள்ளன. 15 தலைப்புகளில் 14 அடியார்கள் நேரிடையாக கேட்டவை, பார்த்தவை ஆகியவைகள் தொகுத்து அளிக்கப்பட்ட ஒரு ஞானப் புதையல்